ஊட்டியில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


ஊட்டியில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x

ஊட்டியில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

ஊட்டி

தி.மு.க. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நடந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இதுகுறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், தமிழக அரசு அறிவித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது என்றனர்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள 19 மண்டல்களில் உள்ள திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


Next Story