திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்


திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
x

தி.மு.க.அரசு மீது குற்றம் சாட்டி திருவண்ணாமலையில் பாரதீய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

தி.மு.க.அரசு மீதுகுற்றம் சாட்டி திருவண்ணாமலையில் பாரதீய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். ஓ.பி.சி.அணி மாநில துணைத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன், ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் டி.எஸ்.சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் எம்.சதீஷ்குமார், ரமேஷ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் திருமாறன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, ஓ.பி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் ஆர்.ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என அப்ேபாது அவர்கள் குற்றம்சாட்டினர்.

உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் அருணை ஆனந்தன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் ஆர்.விஜயராஜ், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சந்திரா, ராஜ தமயந்தி மற்றும் மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story