பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் மனு
பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்
மதுரை மாநகராட்சி நீச்சல்குளம் அருகே மத்திய அரசு நிதியில் கட்டப்பட்ட கழிப்பறை போதிய பராமரிப்பு இன்றி பயன்பாடின்றி உள்ளது. மேலும் உலகத் தமிழ்ச் சங்க கட்டிட சுற்றுச்சுவரில் பதிக்கப்பட்டுள்ள திருக்குறள் கல்வெட்டுகள் செடி, கொடிகளால் மறைக்கப்பட்டு உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். காந்தி மியூசியம் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுத்தமின்றி சுகாதாரமற்ற முறையில் இருக்கிறது. அதனை பராமரிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் மகா. சுசீந்திரன் சார்பில் பொருளாதார மாவட்ட துணை தலைவர்கள். பழனிவேல், சத்யம், செந்தில்குமார், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார், அரசரடி மண்டல் தலைவர் சீமான்சரவணன், நாராயணன், காந்திய சிந்தனையாளர் அனுஅப்சரா ஆகியோர் கலெக்டர் அனீஸ்சேகரை சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.