பா.ஜ.க.வினர் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் மீது சோதனை என்ற பெயரில் அபராதம் விதிப்பது, அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழலை கண்டித்து நேற்று பா.ஜ.க.வினர் கையில் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன், மாவட்ட பொது செயலாளர் வேல்ராஜா, நகர சபை கவுன்சிலர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story