சேந்தமங்கலம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வந்த குடிநீர் தொட்டி இடிப்பு


சேந்தமங்கலம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வந்த குடிநீர் தொட்டி இடிப்பு
x

சேந்தமங்கலம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது.

நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் பேரூராட்சி 1-வது வார்டு குப்பநாயக்கனூரில் பொதுமக்கள் தேவைக்காக தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வந்தது. இந்தநிலையில் மர்மநபர்கள் சிலர் அந்த குடிநீர் தொட்டியை இடித்து, தரைமட்டமாக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர். குடிநீர் தொட்டி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்து அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடியிடம் புகார் தெரிவித்தனர். அப்போது செயல் அலுவலர், பொது வழித்தடத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டதால் அது இடிக்கப்பட்டதாகவும், வேறு இடத்தில் புதிதாக கட்டிக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.


Next Story