நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நேற்று போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கலந்து கொண்டு போதைப் பொருளினால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் போதைப் பொருட்கள் தொடர்பாக காவல் கட்டுபாட்டு அறையை 94981-81216 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதேபோல் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் நேற்று போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Next Story