நகராட்சி பள்ளிக்கு எழுது பொருட்களை வழங்கிய பார்வையற்ற மாணவர்கள்


நகராட்சி பள்ளிக்கு எழுது பொருட்களை வழங்கிய பார்வையற்ற மாணவர்கள்
x

நகராட்சி பள்ளிக்கு எழுது பொருட்களை பார்வையற்ற மாணவர்கள் வழங்கினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், வண்ண பேனாக்கள் உள்பட எழுது பொருட்களை ராஜகோபாலபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கினர். பேனா, பென்சில் இவற்றை கொண்டு எங்களால் எழுத முடியவில்லை. பார்வை உள்ள படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கலாம் என்று மாணவர்கள் விரும்பி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கான அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களை அப்பள்ளியின் தலைமையாசிரியர் வடிவேலன் அழைத்து வந்து மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். இந்த மாணவர்களின் செயலை நகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.


Next Story