ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் முற்றுகைப் போராட்டம்
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
ஆற்காடு
ஆற்காடு அருகே டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
ஆற்காடு அடுத்த லாடவரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. விளைனிலங்களுக்கு அருகே இந்த கடை இருப்பதால் கடைக்கு வரும் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை விலை நிலங்களில் வீசி செல்வதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மேலும் பெண்கள் அந்த வழியாக செல்லவும் அச்சப்படுகின்றனர்.
எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்துிருந்துள்ளனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் 12 மணியளவில் கடையை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்களை கடை திறக்க விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது,
தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.