குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியல்
பேரணாம்பட்டில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
வேலூர்
பேரணாம்பட்டு டவுன் பாகருசேன் 4-வது தெருவில் ஆழ்துளை கிணறு பழுதடைந்ததால் கடந்த 20 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் காலி குடங்களுடன் அம்பேத்கர் நகர் வளைவு அருகில் ஆம்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேரணாம்பட்டு - ஆம்பூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், மற்றும் நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக பணியாளர்களை வரவழைத்து ஆழ்துளை கிணறை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story