குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியல்


குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியல்
x

ஜோலார்பேட்டை பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன், பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

குடிநீர் பிரச்சினை

ஜோலார்பேட்டை பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் வராததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூரில், திருப்பத்தூர் மெயின்ரோடு பகுதியில் பல வருடங்களாக கால்வாய் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 6 மாதமாக குடி தண்ணீர் பிரச்சினை இருந்து வந்தது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு நாட்களுக்குள் குடிநீர் வழங்குவதாகவும், கால்வாய் வசதி ஏற்படுத்தித் தருவதாகவும் கூறினர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story