ஏரியை தூர்வார முட்டுக்கட்டை: செந்துறை போலீஸ் நிலையம் முற்றுகை


ஏரியை தூர்வார முட்டுக்கட்டை: செந்துறை போலீஸ் நிலையம் முற்றுகை
x

ஏரியை தூர்வார முட்டுக்கட்டை போடுபவர் மீது நடவடிக்கை கோரி செந்துறை போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராம ஊராட்சியில் பொதுமக்கள் சார்பில் ஏரியை தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், அதே ஊரை சேர்ந்த ஒருவர் ஏரியில் வண்டல் மண் வெட்டி விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சத்யா மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் ஏரியை தூர்வார முட்டுக்கட்டை போட்டு வருபவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் செந்துறை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் நள்ளிரவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story