உண்ணாமலைக்கடையில் 20 வீடுகளில் கழிவுநீர் குழாய்கள் அடைப்பு; பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
உண்ணாமலைக்கடையில் 20 வீடுகளில் கழிவுநீர் குழாய்களை மூடி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
கன்னியாகுமரி
குழித்துறை,
உண்ணாமலைக்கடையில் 20 வீடுகளில் கழிவுநீர் குழாய்களை மூடி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது
பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் மழைநீர் வடிகால் ஓடைகளில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதை தடுக்கும் வகையில் பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன்படி அதிகாரிகள் கழிவுநீர் குழாய்களை அடைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று பேரூராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பன்னியணி மற்றும் குருவிக்காடு பகுதிகளில் உள்ள 20 வீடுகளில் இருந்து கழிவுநீர் பாயும் குழாய்களை பேரூராட்சி செயல் அலுவலர் பிரதாபன், சுகாதார ஆய்வாளர் மேஷாக் ஆகியோர் முன்னிலையில் பணியாளர்கள் அடைத்தனர்.
Related Tags :
Next Story