கால்வாயில் உள்ள அடைப்புகள் மினி பொக்லைன் மூலம் அகற்றம்


கால்வாயில் உள்ள அடைப்புகள் மினி பொக்லைன் மூலம் அகற்றம்
x

ஆரணியில் கால்வாயில் உள்ள அடைப்புகள் மினி பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு நீர்த்தேங்கி காணப்படுகிறது.

எனவே, பருவமழையை கருத்தில் கொண்டு சுகாதார வசதி செய்து தர வேண்டும் என அனைத்து நகரசபை உறுப்பினர்களும் நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளரிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனை வலியுறுத்தி நகரமன்ற கூட்டத்திலும் பேசினர்.

இதன் காரணமாக மிககுறுகலான சாலையிலும் சென்றுவரும் மினி பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியினை நகரசபை தலைவர் ஏ.சி.மணி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து கால்வாயில் இருந்த அடைப்புகள் அகற்றப்பட்டன.

அப்போது ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி, நகரசபை துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகரசபை உறுப்பினர்கள் நவநீதம், சிவகுமார், பொறியாளர் டி.ராஜவிஜய காமராஜ், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story