தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ரத்ததான முகாம்


தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் ரத்ததான முகாம்
x

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ரத்ததான முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நேற்று ரத்ததான முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

ரத்ததானம்

சர்வதேச ரத்ததானம் செய்வோர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பெரு வணிகர் சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ரத்ததான முகாமை தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடத்தியது. முகாமுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆணையாளர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் சுமார் 50 பேர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், மாநகர நல அலுவலர் அருண்குமார், தூத்துக்குடி யங் இந்தியன்ஸ் அமைப்பின் தலைவர் சில்வியா ஜான், துணைத் தலைவர், ராஜேஷ் தில்லை, மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். சுகாதார அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story