ரத்த தான முகாம்; அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ரத்த தான முகாம்; அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

பாளையங்கோட்டையில் ரத்த தான முகாமை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்ட சுகாதார துறை சார்பில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்தார். இதில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் இளைஞர்கள், பெண்கள் பலர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.


Next Story