ஆர்.வி.கல்லூரியில் ரத்ததான முகாம்
செம்போடை ஆர்.வி.கல்லூரியில் ரத்ததான முகாம்
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ஆர்.வி.கல்வி நிறுவனத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், ரெட் கிராஸ், இளம் ரெட் கிராஸ், தேத்தாக்குடி ஆரம்ப சுகாதார நிலையம், வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் நாகை மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது. முகாமிற்கு கல்லூரி நிறுவனர் வரதராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் செந்தில் முன்னிலை வகித்து,
ரத்ததானம் செய்ய வேண்டிய அவசியம், சமூக அக்கறை குறித்து பேசினார். பொறியியல் கல்லூரி முதல்வர் கலிவரதன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் நடராஜன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கல்யாண சுந்தரம், பொறியியல் கல்லூரி துணை முதல்வர் முகமது பைசல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முகாமில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் ரத்ததானம் செய்தனர். முன்னதாக வணிக மேலாண்மை துறை உதவி பேராசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். முடிவில் கணினி துறை தலைவர் கலையரசி நன்றி கூறினார்.