திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ரத்ததான முகாம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணி திட்டம் அணி எண்.44 மற்றும் 48-ன் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறிதல் மற்றும் ரத்ததானம் முகாம் நடந்தது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண்.48-ன் திட்ட அலுவலர் கவிதா வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் ராகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது மேற்பார்வையில் 10 மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் 100 பேர் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில், பொருளியல் துறை தலைவர் ரமேஷ், ஆங்கில துறை தலைவர் சாந்தி, பேராசிரியர்கள் சேவியர் பெஸ்கி ஆரோக்கிய ராஜ், தாவீது ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், கலந்து கொண்டவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நாட்டு நலப்பணி திட்டம் அணி எண் 44 ன் திட்ட அலுவலர் சத்தியலெட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கவிதா, சத்தியலெட்சுமி, பேராசிரியர் தாவீது ராஜா மற்றும் அணியின் மாணவர்கள் செய்திருந்தனர்.