ரத்ததான முகாம்; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ரத்ததான முகாம்; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் ரத்ததான முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் நியூ ஷாலோம் மிஷன் அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சவுந்தரராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் சங்கரநாராயணன், கோவில்பட்டி முன்னாள் நகர்மன்ற தலைவர் சங்கர பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், நடுவிற்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் ஆழ்வார் உதயகுமார், வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி, பேரூர் கழக துணைச் செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர்கள் பிச்சை, அருள்சுந்தர், மயில்ராஜ் தொழிலதிபர் முனியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து எட்டயபுரம் அருகே இளம்புவனம் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பணிக்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன், கோவில்பட்டி முன்னாள் நகர்மன்ற தலைவர் சங்கர பாண்டியன், நடுவிற்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமி பூஜையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொழிலதிபர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story