ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பி.செந்தில்குமார் தலைமையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க முன்னாள் தலைவர் எம்.சுப்பிரமணியம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரத்து செய்து அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்கள் முழுமையாக வழங்க வலியுறுத்தி நேற்று ரத்த கையெழுத்து இயக்கம் தொடங்கினர்.

இந்த ரத்தக்கையெழுத்து கோரிக்கை மனுவை தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப போவதாக கூறினர்.



Next Story