காட்பாடியில் ரத்ததான முகாம்


காட்பாடியில் ரத்ததான முகாம்
x

சர்வதேச ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு காட்பாடியில் ரத்ததான முகாம் நடந்தது.

வேலூர்

காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் சர்வதேச ரெட்கிராஸ் தினத்தினை முன்னிட்டு சிறப்பு ரத்த தான முகாம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் விழா காட்பாடி செங்குட்டை சமுதாய கூடத்தில் நடந்தது.

விழாவிற்கு ரெட் கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில்குமார், மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா ஆகியோர் கலந்துகொண்டு ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தனர். முகாமில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து வேலூர் மாநகராட்சியில் பின்தங்கிய குடும்பத்தினர் 50 பேருக்கு அரிசி மற்றும் உணவுப்பொருட்களை காட்பாடி லயன் சங்க தலைவர் செல்வமணி, செயலாளர் பழனியப்பன் ஆகியோர் வழங்கி பேசினர்.

இதில் டாக்டர் வீ.தீனபந்து, மேலாண்மை குழு உறுப்பினர் ருக்ஜி ராஜேஷ் ஜெயின், செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, ரமேஷ்குமார் ஜெயின், துணைத்தலைவர்கள் ஆர்.விஜயகுமாரி, ஆர்.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் பொருளாளர் வி.பழனி நன்றி கூறினார்.


Next Story