ரத்ததான முகாம்
ரத்ததான முகாம்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டம் கொருக்கை அரசு பாலிடெக்னிக்கில் ரத்ததான முகாம் மற்றும் இலவச உடல் நல பரிசோதனை முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் காசி வரவேற்றார். முகாமை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பாண்டியன், நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருத்துறைப்பூண்டி முதன்மை மருத்துவ அதிகாரி சிவக்குமார், திருவாரூர் மருத்துவ கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அதிகாரி பிரித்தா, திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார், இந்திய செஞ்சிலுவை சங்க திருத்துறைப்பூண்டி வட்ட தலைவர் சிவா. சண்முகவடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு 50 யூனிட் ரத்தம் வழங்கினர். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் பாலிடெக்னிக் உடற்கல்வி இயக்குனர் சந்திரமோகன் நன்றி கூறினார்.