ரத்ததான முகாம்


ரத்ததான முகாம்
x
தினத்தந்தி 13 July 2022 12:15 AM IST (Updated: 13 July 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் ரத்ததான முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டையில் கெலமங்கலம் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் தேன்கனிக்கோட்டை சவுடேஸ்வரி மகாலில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில் நடந்தது. முகாமை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மனோகரன், தாசில்தார் குருநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஓசூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயன், கெலமங்கலம் பள்ளி சிறார் நல மருத்துவர்கள் சங்கீதா, மணிகண்டன், அன்புச்செல்வன் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர். முகாமில் தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சிவகுருநாதன், ராமச்சந்திரன், ரங்கநாதன், அசோக், நவீன், சந்தோஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story