பூத்து குலுங்கும் பருத்தி செடிகள்


பூத்து குலுங்கும் பருத்தி செடிகள்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் வட்டார பகுதியில் பூத்து குலுங்கும் பருத்தி செடிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் வட்டார பகுதியில் பூத்து குலுங்கும் பருத்தி செடிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பருத்தி விதைப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து கோடை சாகுபடியான உளுந்துபயறு, பாசிப்பயறு, ஆகியவற்றை சாகுபடி செய்து இருந்தனர். இதன் அறுவடை பணிகளும் முடிந்து விட்டது.

தற்போது செம்பனார்கோவில் வட்டார பகுதியான செம்பனார்கோவில், பரசலூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், திருவிளையாட்டம், நல்லாடை, கொத்தங்குடி, அரசூர், விளாகம், இலுப்பூர், விசலூர், சங்கரன்பந்தல், காட்டுச்சேரி, திருவிடைக்கழி, கஞ்சாநகரம், மேலையூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி விதைப்பு செய்து இருந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படுவதில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆற்றுபாசனத்தை பெரும்பாலும் நம்பியுள்ள மேற்கண்ட பகுதி விவசாயிகள், ஆற்றின் நீர் வற்றியதால் நிலத்தடி நீரை பயன்படுத்தி பம்பு செட் மூலம், பருத்தி சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு நாட்களில் விதையானது முளைத்து 50 நாட்களில் பருத்தி பூ பூக்க ஆரம்பிக்கும், 100 நாட்களில் பருத்தியை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். பணப்பயிரான பருத்திக்கு இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்று நம்பிக்கையாக உள்ளதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதியில் மழை விட்டு,விட்டு பெய்ந்த நிலையில் பருத்தி செடிக்கு உகந்தது என்றும் இதனால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.


Next Story