நத்தம் பகுதியில் பூத்துக்குலுங்கும் மாமரங்கள்


நத்தம் பகுதியில் பூத்துக்குலுங்கும் மாமரங்கள்
x

நத்தம் பகுதியில் மாமரங்கள் பூத்துக்குலுங்குகின்றன.

திண்டுக்கல்

நத்தம் மற்றும் வத்திபட்டி, பரளி, லிங்கவாடி, மலையூர், முளையூர், புன்னப்பட்டி, உலுப்பக்குடி, செந்துறை, மணக்காட்டூர், திருமலைக்கேணி, கோபால்பட்டி, சாணார்பட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மாந்தோப்புகள் உள்ளன. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து மாமரங்களில் பூக்கள் பூக்க தொடங்கின.

இதனால் தற்போது மாமரங்கள் பூத்துக்குலுங்குகின்றன. மேலும் பல்வேறு இடங்களில் மாமரங்களில் பிஞ்சுகள், காய்கள் பிடித்து வருகிறது. ஏப்ரல் மாத இறுதியில் மாங்காய்கள் அறுவடை ஆகும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். முதற்கட்டமாக கல்லாமை, பாலாமணி போன்ற மா ரகங்கள் பூக்க தொடங்கின. அதைத்தொடர்ந்து இமாம்ப சந்து, சப்பட்டை, காசா லட்டு, நாடு உள்ளிட்ட பல்வேறு ரகங்களும் பூக்க தொடங்கியுள்ளன.

இதுகுறித்து மா விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு 70 சதவீத மாமரங்களில் பூக்கள் பூத்துள்ளது. எஞ்சியுள்ள மாமரங்கள், மருந்து தெளித்ததின் தாக்கத்தினாலும், வறட்சியின் பாதிப்பினாலும் பட்டு போய்விட்டது. அத்துடன் பூக்கும் தன்மையை இழந்த மரங்களும் இதில் சேரும். இருப்பினும் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என்றனர்.


Next Story