பூத்துக்குலுங்கும் காட்டுத்தீ மலர்கள்


பூத்துக்குலுங்கும் காட்டுத்தீ மலர்கள்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூத்துக்குலுங்கும் காட்டுத்தீ மலர்கள்

நீலகிரி

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இங்கு அரிய வகை வனவிலங்குகள் மட்டுமின்றி விலை உயர்ந்த தாவரங்களும் உள்ளன. குறிப்பாக ஒவ்வொரு காலநிலைகளுக்கு ஏற்ப பூக்கக்கூடிய தாவரங்களும் இருக்கின்றன. இதை வனத்துறையின் வாகனத்தில் சவாரி சென்று, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழை நின்று கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனால் வசந்த காலத்தை உணர்த்தும் வகையில் முதுமலை, மசினகுடி பகுதியில் கோடைகாலத்தில் மலரக்கூடிய 'பிளேம் ஆப் தி பாரஸ்ட்' என்ற காட்டுத்தீ மலர்கள் பூத்துக்குலுங்குகிறது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிளேம் ஆப் தி பாரஸ்ட் மரம் 20 முதல் 40 அடி உயரம் வரை வளரும். இலையுதிர் காலங்களில் மரங்களின் இலைகள் உதிர்ந்து விடும். ஆனால் அழகிய பூக்கள் மட்டும் காணப்படும். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இந்த பூக்கள் தொலைவில் இருந்து பார்க்கும்போது தீ பிழம்பு போல் மலர்ந்து காணப்படுவது கொள்ளை அழகை தரும். ஒவ்வொரு பூவும் 5 இதழ்களை கொண்டதாக உள்ளது. கிளிகளின் அலகுகளை போன்று இருப்பதால் கிளி மரம் என்றும் அழைக்கப்படுகிறது.

முந்தைய காலத்தில் ஹோலி பண்டிகைக்கு வர்ணம் தீட்டவும் பயன்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலரை சிறப்பிக்கும் வகையில் தபால் தலை வெளியிட்டுள்ளது என்றனர். வனப்பகுதியில் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.


Next Story