நாட்டறம்பள்ளி பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் ஊதுபத்தி தொழில் பாதிப்பு
நாட்டறம்பள்ளி பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் ஊதுபத்தி தொழில் பாதிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
நாட்டறம்பள்ளி பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் ஊதுபத்தி தொழில் பாதிக்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஒருநாளைக்கு 10-க்கும் மேற்பட்ட நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் வீடுகளில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் நாட்டறம்பள்ளியை சுற்றி ஏராளமான சிறு, குறு தொழில்களான ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் ஊதுபத்தி தொழில் பாதிக்கப்படுகிறது. மேலும் இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் நஷ்டம் ஏற்பட்டு தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை தவிக்க மின்சாரத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.