புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் -அன்புமணி ராமதாஸ்
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு.
சென்னை,
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. இதன் திறப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவில் சில எதிர்க்கட்சிகள் பங்கேற்கப்போவது இல்லை என்று அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பா.ம.க. பங்கேற்கும் என்று, அக்கட்சித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் 28-ந்தேதி (நாளை) புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பா.ம.க. கலந்துகொள்ளும்.
இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story