அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்புமணி ராமதாஸ் கைது

என்.எல்.சி. நிர்வாக விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்து, நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அலுவலகத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் முற்றுகையிட சென்றனர். அப்போது அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூரில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பவானி

பவானியில் ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்தியூர் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். தலைவர் வக்கீல் செங்கோட்டையன், பசுமைத்தாயக மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் திருமுருகன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மாநில டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க பேரவை செயலாளர் ராம.முத்துக்குமார், மாநில பொருளாளர் சேகர், பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட தலைவர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் சத்திரியன் சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் ராசு, ஜம்பை பேரூர் செயலாளர் சம்பத், கவுன்சிலர் குமார், முன்னாள் கவுன்சிலர் தாண்டான், மகளிர் அணி சத்யா தினேஷ்குமார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அந்தியூர்

அந்தியூர் பஸ் நிலையம் முன்பு நடந்த பா.ம.க. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சி.ஆர்.கோபால் தலைமை தாங்கினார்.

மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் எம்.மனோகரன், இளைஞரணி துணைச் செயலாளர் நட்ராஜ், தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்தியூர் ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி சீனிவாசன், அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்சாமி, அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அங்குசாமி, இளைஞரணி முன்னாள் மாவட்ட செயலாளர் ஒலகடம் சரவணன், முன்னாள் ஒலகடம் நகர செயலாளர் கார்த்திகேயன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே பா.ம.க. மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் மாவட்டம், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


Next Story