பா.ம.க.வினர் தபால் அனுப்பும் போராட்டம்
கோவில்பட்டியில் பா.ம.க.வினர் தபால் அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மற்றும் பிற்பட்டோர் ஆணையாளருக்கு தபால் அனுப்பும் போராட்டம் கோவில்பட்டி தபால் நிலையத்தில் நடந்தது.
கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் திலகபாமா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, வேலுச்சாமி, வடக்கு மாவட்ட தலைவர் மாடசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் காளிராஜ், தெற்கு-வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் மகாராஜன், ராஜா, நகர செயலாளர் கருப்பசாமி, ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் காளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story