உண்டு உறைவிட பள்ளி ஆண்டு விழா


உண்டு உறைவிட பள்ளி ஆண்டு விழா
x

வள்ளியூர் உண்டு உறைவிட பள்ளி ஆண்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூரில் நரிக்குறவர்கள் குழந்தைகளுக்காக செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பள்ளியின் முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், ''இப்பள்ளி குழந்தைகளின் திறமைகளை பாராட்டுகிறேன். இப்பள்ளி மாணவ, மாணவிகள் மாநில அளவில் பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்'' என்றார். மேலும் அங்கிருந்த குழந்தைகளை தூக்கி வைத்து கொஞ்சினார்.

தலைமை ஆசிரியை லெசிகா சுபா வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட திட்ட அலுவலர் சிவராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், தொடக்கப்பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் ராஜ்குமார், ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ-மாணவிகள் மாவட்ட கலெக்டருக்கு பாசி மாலை அணிவித்து ரோஜா மலர் கொடுத்து வரவேற்றனர். ஒருங்கிணைப்பாளர் சபேஷன் நன்றி கூறினார்.


Next Story