சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தெப்ப உற்சவம்


சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தெப்ப உற்சவம்
x

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமிக்கு தங்க கவச அலங்கார சேவையும் நடந்தது. மாலை சிவசுப்பிரமணிய சாமி திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. பின்னர் மீண்டும் சாமி தெப்பக்குளத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தெப்ப உற்சவம் நடந்தது.

விழாவில் தர்மபுரி தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் சாமி தெப்பக்குளத்திற்குள் 7 முறை வலம் வந்தார். இதையடுத்து சாமி தெப்பக்குளத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக தெப்ப உற்சவ நிகழ்ச்சிகள் அனைத்தும் எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story