சுப்பிரமணியசாமி கோவிலில் தெப்பத் திருவிழா


சுப்பிரமணியசாமி கோவிலில் தெப்பத் திருவிழா
x
தினத்தந்தி 24 July 2022 8:55 PM IST (Updated: 24 July 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்த தெப்பத் திருவிழாவை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராணிப்பேட்டை

வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் நடந்த தெப்பத் திருவிழாவை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்பத்திருவிழா

வள்ளிமலையில் உள்ள புகழ்பெற்ற சுப்ரமணியசாமி கோவிலில் ஆண்டு்தோறும் ஆடிக்கிருத்திகையன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை தெப்பத் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்கவச சிறப்பு அலங்காரம், மகா தீப ஆராதனை ஆகியவை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வள்ளிமலை கோவில் அருகே உள்ள சரவண பொய்கை தெப்பக்குளத்தில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி, உலா வரும் தெப்பத்திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.

பக்தர்கள் தரிசனம்

அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'வள்ளிமலை முருகனுக்கு அரோகரா', வள்ளி மணாளனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பி பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன், கோவில் செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோரும், மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள், அறங்காவலர் குழுவினர், அறநிலைத்துறையினர், நாட்டாமைதாரர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர். இரவு இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.


Next Story