விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை


விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
x

கடலோரப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

மீனவர்களுக்கு தடை

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

மழையளவு

காரையூர் சுற்றுவட்டார பகுதியான மேலத்தானியம், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், ஒலியமங்கலம், சடையம்பட்டி, இடையாத்தூர், அரசமலை, நல்லூர், காரையூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் குளிர்ந்த காற்று நிலவியது.

மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-ஆதனக்கோட்டை-16.30, பெருங்களூர்- 21, புதுக்கோட்டை -20, ஆலங்குடி - 27.10, கந்தர்வகோட்டை - 20.40, கறம்பக்குடி -31.40, மழையூர்-24.40, கீழணை-16.80, திருமயம்-14, அரிமளம்-16.60, அறந்தாங்கி -14.40, ஆலங்குடி -16, நாகுடி-16, மீமிசல்-15.40, ஆவுடையார்கோவில்-17, மணமேல்குடி -16.50, இலுப்பூர் -20.80, குடுமியான்மலை-28.90, அன்னவாசல் -12.40, விராலிமலை -12, உடையாளிப்பட்டி-13.50, காரையூர்- 17.60, பொன்னமராவதி-16, கீரனூர் -36.20.


Next Story