ரூ.10 கோடியில் படகு குழாம்
கீழப்பாவூர் பெரியகுளத்தில் ரூ.10 கோடியில் படகு குழாம் அமைக்க கலெக்டர் ஆய்வு செய்தார்.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சியின் மையப்பகுதியில் கீழப்பாவூர் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தில் சுற்றுலாத்துறை மூலமாக ரூ.10 கோடி மதிப்பில் புதிதாக படகு குழாம் அமைக்கப்பட உள்ளது. இந்த படகு குழாம் அமைப்பதற்கு முன் ஆய்வு பணி நேற்று நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுலா துறை வளர்ச்சி அலுவலர் சீதாராமன், கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜா.மாணிக்கராஜ், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களுடன் முதற்கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்றது.
கீழப்பாவூர் பெரியகுளத்தில் மூலதனமான்ய நிதித்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 63.60 மீட்டர் நீளம், 5.15 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டு வரும் பெரியகுளம் பாலம் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.