நாகை மாவட்டத்தில் விசைப்படகுகள் ஆய்வு
நாகை மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகள் வருகிற 19-ந் தேதி ஆய்வு செய்யப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் உள்ள விசைப்படகுகள் வருகிற 19-ந் தேதி ஆய்வு செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விசைப்படகுகள்
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின்படி நாகை மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து விசைப்படகுகளும் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
ஆய்வின்போது படகு உரிமையாளர்கள், படகுகளின் பதிவு சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீட்டு உரிமம் மற்றும் வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம் ஆகியவற்றினை ஆய்வு செய்ய வரும் குழுவினரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைதொடர்பு கருவிகள், கடல் பயண பாதுகாப்பு கருவிகள் ஆகியவை படகில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீன்பிடி கலன்களில் பதிவெண் தெளிவாக தெரியும்படி எழுதி வைத்திருக்க வேண்டும்.
ரத்து செய்யப்படும்
ஆய்வில் காண்பிக்கப்படாத விசைப்படைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் நிறுத்தம் செய்வதுடன், அந்த படகுக்கான பதிவு சான்று ரத்து செய்யப்படும். மேலும் ஆய்வு நாளன்று படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்வரும் நாட்களில் படகினை ஆய்வு செய்யக் கோரி படகு உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது.
எனவே அனைத்து விசைப்படகுகளையும் ஆய்வுக்கு தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.