'ஆண்களுக்கு எதிராக ஆயுதமாக்கப்படும் வரதட்சணை புகார்'


ஆண்களுக்கு எதிராக ஆயுதமாக்கப்படும் வரதட்சணை புகார்
x
திருப்பூர்


ஆண்களுக்கு எதிரான ஆயுதமாக வரதட்சணை புகாரை பல பெண்கள் பயன்படுத்துவதாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் பஞ்சாப் இளைஞர் வருத்தம் தெரிவித்தார்.

முதிர் கன்னிகள்

தாங்கள் கண்ணுக்கு கண்ணாக பொத்தி வளர்த்த பெண்ணையும் கொடுத்து, அவருடன் சேர்த்து பணம், நகை, கார், பங்களா என்று கொடுக்க வேண்டிய அவல நிலை பெண்ணைப்பெற்றவர்களுக்கு இருக்கிறது. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று சட்டம் சொல்கிறது.

ஆனால் இன்றளவும் சுற்றம், நட்பு சாட்சியாக, புகைப்படக்காரர்களின் முன்னிலையில் வரதட்சணை வாங்குவதென்பது சாதாரணமான நிகழ்வாக மாறிவிட்டது. வரதட்சணை கொடுக்க முடியாமல் முதிர் கன்னிகளாக வாடும் பல பெண்கள் இன்றளவும் இருக்கத் தான் செய்கிறார்கள். தாய் வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரச் சொல்லி கணவனும், மாமியாரும் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து நாடு முழுவதும் பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல நேரங்களில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது கணவனைப்பழி வாங்கும் ஆயுதமாக வரதட்சணைக்கொடுமை புகார் பயன்படுத்தப்படு'ஆண்களுக்கு எதிராக ஆயுதமாக்கப்படும் வரதட்சணை புகார்'கிறது என்பது பல ஆண்களின் புலம்பலாக உள்ளது.

விழிப்புணர்வு

அந்தவகையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (வயது 32).பிரபலமான மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் பொய்யான வரதட்சணை வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக குமுறுகிறார். இதுகுறித்து ஜீவன் கூறியதாவது:-

எனக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது என் மீது வரதட்சணை கொடுமை என்று பொய்யான வழக்கு தொடுக்கப்பட்டது. இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன். அவமானங்களை சந்தித்தேன். மன உளைச்சலுக்கு ஆளானேன்.

எனவே தவறான வரதட்சணை புகாருக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஸ்ரீநகர், ஆக்ரா, குவாலியர், குஜராத், நாக்பூர், ஹைதராபாத், பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகள் வழியாக 26 நாட்கள் பயணம் செய்து தற்போது மடத்துக்குளம் வந்துள்ளேன்.

'வொர்க் பிரம் ஹோம்' என்ற வகையில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே மீதமுள்ள நேரத்தில் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இனி ஒரு ஆண் கூட பொய்யான வரதட்சணை வழக்கில் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் என்னுடைய பயணத்தின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story