கீழ்பவானி வாய்க்காலில் 7 வயது சிறுவன் உடல் மீட்பு - போலீசார் விசாரணை


கீழ்பவானி வாய்க்காலில் 7 வயது சிறுவன் உடல் மீட்பு - போலீசார் விசாரணை
x

கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் 7 வயது சிறுவனின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று மிதந்து செல்வதாக அக்கம்பக்கத்தினர் கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து சத்தி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாய்க்கால் தண்ணீரில் இறங்கி 45 மதிக்க தக்க ஆண் உடலை தேடினர். அப்போது 7 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் உடல் மிதந்தது தெரியவந்து மீட்கப்பட்டது. பின்னர் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story