தூத்துக்குடியில்கடலில் மூழ்கிய பள்ளிமாணவன் உடல் மீட்பு


தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்கடலில் மூழ்கிய பள்ளிமாணவன் உடல் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்த்துக்குடி சவேரியார்புரம் திரேஸ்நகரை சேர்ந்தவர் மகேஷ் ராஜன். இவருடைய மகன் கிஷோர் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம் தனது நண்பர்கள் 3 பேருடன் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் குளித்து உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிஷோர் கடலில் மூழ்கி விட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கடலில் மூழ்கிய மாணவன் கிஷோரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலையில் கடலில் மூழ்கிய கிஷோரின் உடல் வெள்ளப்பட்டி பகுதியில் கரை ஒதுங்கியது. இதைத் தொடர்ந்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story