கிணற்றில் வாலிபர் பிணம்
கிணற்றில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
தென்காசி
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பெருமாள்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த முத்து மகன் முத்து வீரப்பன் (வயது 30). இவர் மாங்குடி கிராமம் அருகே உள்ள ஒரு கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, முத்துவீரப்பனின் உடலை கைப்பற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்து வீரப்பன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது சாவுக்கு வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story