அலங்காநல்லூர் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இளம்பெண் பிணம்- யார் அவர்?போலீசார் விசாரணை


அலங்காநல்லூர் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இளம்பெண் பிணம்- யார் அவர்?போலீசார் விசாரணை
x

அலங்காநல்லூர் அருகே கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை

அலங்காநல்லூர்,


அலங்காநல்லூர் அருகே கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இளம்பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண் பிணம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வடுகபட்டி-குலமங்கலம் செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றை எட்டி பார்த்தனர். அங்கு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்றனர். பின்னர் கயிற்று கட்டிலை கிணற்றுக்குள் இறக்கி அழுகிய நிலையில் தண்ணீரில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு தீயணைப்பு துறையினர் மேலே கொண்டு வந்தனர்.

கைகள், கால்கள் கட்டப்பட்டன

அப்போது இறந்த பெண்ணின் கால்கள், கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் அப்பெண்ணை எங்கேயாவது கொலை செய்து இங்கே கொண்டு வந்து உடலை கிணற்றில் போட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெண்ணின் உடலை பரிசோதனை செய்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதானைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story