காயங்களுடன் வாலிபர் உடல் மீட்பு


காயங்களுடன் வாலிபர் உடல் மீட்பு
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே காயங்களுடன் வாலிபர் உடல் மீட்கப்பட்டார். அவர் யார்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே ஞானியார் குடியிருப்பு விலக்கு இட்டமொழிச் சாலையில் ரத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சாலைஓரத்தில் காயங்களுடன் கிடந்த வாலிபரஇந் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் யார்? என உடனடியாக அடையாளம் தெரியவில்லை. கைலி, சட்டை அணிந்துள்ள அவர் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றபோது வாகனம் மோதி இருந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அவர் யார்? அவர் மீது மோதிய வாகனம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story