விஷம் குடித்து பொக்லைன் எந்திர டிரைவர் தற்கொலை: மதுகுடிப்பதை தந்தை கண்டித்ததால் விபரீத முடிவு
விஷம் குடித்து பொக்லைன் எந்திர டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கலியமூர்த்தி (வயது 54). இவரது மகன் அஜித்குமார் (20). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார். அஜித்குமார் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு தராமல் தினசரி நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு செலவு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜித்குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரை கலியமூர்த்தி ஏன் மதுகுடித்துவிட்டு பணத்தை வீண் செலவு செய்கிறாய் என்று கேட்டு கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அஜித்குமார் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து மதுவில் கலந்து குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திாியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சாந்தா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.