பொக்லைன் ஆபரேட்டர் தற்கொலை
எட்டயபுரம் அருகே பொக்லைன் ஆபரேட்டர் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பிரபு (வயது 25). இவர் பொக்லைன் ஆபரேட்டராக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பன்றியை கொல்வதற்காக பயன்படுத்தும் மாத்திரையை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். உடனே பிரவுவை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story