வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை


வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை
x

நெல்லையில் வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்

திருநெல்வேலி

நெல்லையில் வாகனங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

கோவை சம்பவம்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை புதிய பஸ் நிலைய வளாகத்தில் திடீரென்று வெடிகுண்டு தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.

திடீர் சோதனை

இந்த நிலையில் நேற்று நெல்லை மாநகரில் முக்கிய சந்திப்புகளில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தும் இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் சோதனை நடத்தினர். அங்கு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் விவரங்களையும் சேகரித்தனர்.

இதேபோல் வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள்களிலும் சோதனை நடத்தினார்கள். இதுதவிர நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.


Next Story