ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு சோதனை


ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு சோதனை
x

ரெயில் நிலையத்தில் மோப்பநாய் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

திருச்சி

கோவையில் கடந்த 23-ந்தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு, சோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பயணிகள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் சோதனை மூலம் அனுமதிக்கப்படுகிறார்கள். சந்தேகப்படும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது தவிர மோப்பநாய் மூலம் பார்சல்கள் சோதிக்கப்படுகிறது. ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.


Next Story