குறைவு முத்திரை தீர்வை செலுத்தி பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம்-நெல்லை கலெக்டர் விஷ்ணு தகவல்
பத்திர பதிவு துறையில் முறையான கட்டணம் செலுத்தாதவர்கள் குறைவு முத்திரை தீர்வையை செலுத்தி பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
பத்திர பதிவு துறையில் முறையான கட்டணம் செலுத்தாதவர்கள் குறைவு முத்திரை தீர்வையை செலுத்தி பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முனைப்பு இயக்கம்
தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வாயிலாக இந்திய முத்திரைச் சட்ட பிரிவுகள் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட சிறப்பு முனைப்பு இயக்கம் வருவாய் மாவட்டம் தோறும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பதிவு மாவட்டங்களான நெல்லை, பாளையங்கோட்டை, தென்காசி, சேரன்மாதேவி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பதிவு மாவட்டங்களில் கடந்த 1-ந்் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை ஒரு சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை, பாளையங்கோட்டை, தென்காசி, சேரன்மாதேவி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதி மாவட்டங்களில் உள்ள 85 சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பான குறைவு முத்திரைத் தீர்வையை செலுத்த தவறி அதன் காரணமாக நிலுவையாக உள்ள பத்திர ஆவணங்களை அந்த ஆவணங்களுக்குரிய விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரை தீர்வையை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் செலுத்தி தங்கள் ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு கட்டணம்
எனவே அவ்வாறான ஆவணதாரர்கள் தங்களுடைய ஆவணத்திற்கு ஏற்பட்டுள்ள குறைவு முத்திரை தீர்வையினை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு கட்டணம் செலுத்தி அசல் ஆவணத்தை விடுவித்துக்கொள்ள ஏதுவாக நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் (முத்திரை) அலுவலகத்திலும், தாசில்தார் (முத்திரை) அலுவலகம், நாகர்கோவில், மார்த்தாண்டம் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களிலும், தாசில்தார் (முத்திரை) அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு இந்த சிறப்பு முனைப்பு இயக்கத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.