பெருமாள் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது


பெருமாள் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

திருநெல்வேலி

திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

சொக்கப்பனை

திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவன் கோவில்களில் சொக்கப்பனை தீபம் கொளுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பெருமாள் கோவில்களில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு கோவிலில் 5,008 விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரியமாணிக்க பெருமாள் கோவில்

இதேபோல் நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் நேற்று இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கொக்கிரகுளம் அழைத்து வரமளிக்கும் நவநீதகிருஷ்ண பெருமாள் கோவிலிலும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். நெல்லை மாநகர பகுதியில் உள்ள பெரும்பாலான பெருமாள் கோவில்களில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.




Next Story