மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா


மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி ஊழியன் கரன் தோப்பில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு- புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுப்பராயன், நகர் மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஷகிலா ரத்தினகுமாரி வரவேற்று பேசினார். விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அரசு சார்பில் புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்களை நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் வழங்கினார். இதில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கருணாமூர்த்தி, கல்வி புற காவலர்கள் செந்தில்குமார், பாபுநேசன், வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story