தேனியில் புத்தக வெளியீட்டு விழா
தேனியில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
தேனி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய 'மாமனிதர் நேரு' என்ற வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா, தேனியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட தலைவர் முருகேசன் கலந்துகொண்டு, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டார்.
அதனை போடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர் பெற்றுக்கொண்டார். இதில், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி, கம்பம் வட்டார தலைவர் ராஜாமுகமது, உத்தமபாளையம் வட்டார தலைவர் சத்தியமூர்த்தி, தேனி நகர தலைவர் கோபிநாத், பெரியகுளம் வட்டார தலைவர் அம்சா முகமது, வட்டார துணைத்தலைவர் எஸ்.பிரபு, இளைஞர் காங்கிரஸ் அசோக், நிர்வாகி பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story