பூம்பூம் மாட்டுக்காரரின் மோட்டார் சைக்கிள் செல்போன் திருட்டு


பூம்பூம் மாட்டுக்காரரின் மோட்டார் சைக்கிள் செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பூம்பூம் மாட்டுக்காரரின் மோட்டார் சைக்கிள் செல்போன் திருட்டு

விழுப்புரம்

திண்டிவனம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா வல்லத்தை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் பாபு(வயது 32). பூம்பூம் மாட்டுக்காரரான இவர் சம்பவத்தன்று அவரது மைத்துனர் கலியபெருமாள்(35) என்பவருடன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள கோதையம்மாள் கோவில் அருகில் தனக்கு சொந்தமான பூம்பூம் மாட்டை கட்டி போட்டுவிட்டு அருகிலே மோட்டார் சைக்கிளையும் நிறுத்தி விட்டு அதன் சாவி மற்றும் செல்போனை தலையருகே வைத்துக்கொண்டு தூங்கினார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story